30.10.09
தமிழ் கணினி: மைக்ரோசாப்ட் வழங்கும் மொழிப்பெயர்ப்பு கருவி
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு எளிமையான மொழிபெயர்ப்பு கருவியை வழங்குகிறது. அதன் பெயர் Microsoft காப்ஷன்ஸ் லாங்க்வேஜ் பேக் (CLIP) .
இதன் மூலம் டூல்டிப் தலைப்புகளில் ஆங்கில பயனர் இடைமுகச் சொற்களுக்கு இணையான தமிழ் மொழிபெயர்ப்புகளை பார்க்கலாம்.
இதைப் பயன்படுத்த. உங்கள் சுட்டியை திரையில் நகர்த்தி, நீங்கள் மொழிபெயர்த்துப் பார்க்க வேண்டிய உரையின் மீது சிறிது நேரம் நிறுத்தினால் போதும், தமிழில் அதன் விளக்கம் காண்பிக்கபடும்.
பயனர்கள் மேலும் சொந்தமாக மொழிபெயர்ப்புகளை சேர்த்துக்கொள்ளலாம், அதைப் பிரதி எடுத்து வேறோரு இடத்தில் ஒட்டிக்கொள்ளவும் செய்யலாம்.
இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்த....
சொடுக்கவும்.
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=4e5258d2-52f4-46b8-8b74-da2dbec7c2f7&DisplayLang=ta
29.10.09
அறிவியல் தமிழ் களஞ்சியம்
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.
அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த வேண்டும். அறிவியலை உணர பல மாறுபட்ட கருத்துகளை பரிமாற சரியான ஊடகம் அமைக்கப்பட வேண்டும். மொழி என்பது ஊடகமென்பதால் அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலைச்சொற்களோடு பல்துறை பதிவுகளோடு வாழ்க்கையை, அறிவியலை, தொழிலை வெளிப்படுத்தும் கருவியாகவும் செம்மைப்படுத்த வேண்டும்.
அதற்கு கணினியும், இணையமும் சிறந்த கருவியாக உள்ளது. மேலும், கணினி சார்ந்த கலைசொற்கள் நிறைய காண உள்ளன. பிற துறை கலைச்சொற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனை போக்க மிகப்பெரிய திட்டமாக கலைச்சொல் களஞ்சியத்தை உருவாக்கி, பிற இடங்களில் இருக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து, இணையத்தில் சிறப்பான அறிவியல்தமிழ் கலைச்சொல் அகராதியை உருவாக்க வேண்டும்.
ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கில வழி அறிவியலறிந்து அறிவு பெறுவதைவிட கருவறையில் இருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழிவழி அறிவியல் அறிவது முழுமையான பல புதுமைகளைப் படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.
நாளும் வளர்ந்துவரும் அறிவுத்துறைகளுக்கு ஏற்ப சமுதாயம் மாற வேண்டும். அதைப்பற்றிச் சிந்திக்கவும் கருத்து பரிமாற்றம் செய்யவும் மொழி தன்னை வடிவமைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலுள்ளது.
தாய்மொழியில் அலாவும் போது புதுமைகளைச் சரளமாகச் சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் என எத்தனையோ சாதனைகளைப் பொருளாதாரத்தில் எளிய மனிதனும் உருவாக்கிட முடியும். அதற்கு தமிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளியாக வேண்டும். தமிழறிஞர்கள், அறிவியலாலர்கள் இணைந்து புதிய கலைச்சொற்களை உருவாக்கிட வேண்டும்.
அறிவியல்தமிழ் நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள் பெருகிட வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தான் உயர் நிலைப்பெறும்போது, துறை சார்ந்த நூல்களைத் தமிழில் எழுதி, அடிமட்ட தமிழனையும் சேரும் வண்ணம் வழிவகைச் செய்திட வேண்டும்.
"அறிவியல்தமிழ் கலைச்சொல் களஞ்சியம் " திட்டமானது அனைத்துத்துறை கலைச்சொல்லகராதி மின்னில் தயாரிக்கவும், பிழைத்திருத்தி, மொழிமாற்றி தயாரிக்கவும் முன் தயாரிப்பு பணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஆர்வம் உடையோர் இப்பணியில் பங்கேற்கலாம்.
இணைவோம் தமிழர்களாய்!! இயற்றுவோம் தமிழால் !
எங்கும் தமிழ்!! எதிலும் தமிழ்!! நிலை உருவாக்குவோம்.

http://spreadsheets.google.26.10.09
தமிழ் இணைய மாநாடுகளும், படிக்கப்பட்ட கட்டுரைகளும்
- நாளைய உலகின் தொழில்நுட்பங்களில் தமிழ் (Tamil in Tomorrow’s Technology)
- வணிகப் பயன்பாட்டுக்கு தமிழ்த் தரவுத்தள வடிவமைப்பும் பகுப்பாய்வும்
- தமிழ் மாணவர்களுக்கான தமிழ் இணைய முயற்சிகள் - ஓர் ஆய்வு
- தமிழ்ப்பள்ளிகளில் கணினி மைய உருவாக்கமும் கல்வி வளர்ச்சியில் அதனுடைய பங்கும்
- Internationalization of the Domain Name System: The Next Big Step in a Multilingual Internet
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...