ஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு ?
இப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது...
அது என்னன்னு தெரிஞ்சுக்கனுமா..
காத்திருங்க .. அப்படின்னு சில வாரங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்....
கொஞ்ச நாள் இணைய சிக்கலால் உங்களுடன் இணையமுடியவில்லை.
இப்ப நம்ம தகவலுக்கு வருவோம்.
நம்மில் பல பேர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்... நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடவுச்சொல்லால் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறோம். இதையும் சிலர் உடைத்து உள்ளே சென்று நம்ம தகவல்களை அறிந்துக்கொள்கிறார்கள்.
இவற்றை தடுக்க என்ன தான் வழி என்பவர்களுக்கு எண்ணினா தான் வழி.. !
புரியவில்லையா...? சிந்திச்சா தான் வழி என்றேன்.
நாம சிந்திப்பதற்கு முன்னே கூகுள் சிந்தித்து விட்டது.
நாம் மட்டுமே அணுகமுடியுங்கிற வழிமுறைகளை வைத்துள்ளது.
அதற்கு பெயர் 2-படி சரிபார்ப்பு மூலம் உள்நுழைதல்
அதாவது 2-Step Verification
உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் வெளிநபர் உங்கள் கணக்கில் உள்நுழைவதிலிருந்து தடுக்கலாம்.
1. ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துதல்
2. இணையத்திலிருந்து மென்பொருளைப் பதிவிறக்குதல்
3. மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்தல்
இதுபோன்ற செயலின் போது, தீங்கிழைப்பவர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை அறிந்து உள்நுழைந்துவிடுவார்கள். அவர்கள் கடவுச்சொல் வைத்திருந்தாலும் அவர்களை 2 படி சரிபார்ப்பு மூலம் தடுக்க முடியும்.
உங்கள் கடவுச்சொல்லை தீங்கிழைப்பவர்கள் திருடும்போது, அவர்கள் சிலவற்றைச் செய்ய கூடும்...
1. உங்களுடைய எல்லா மின்னஞ்சல்கள், தொடர்புகள், புகைப்படங்கள் பார்க்கலாம் அல்லது நீக்கவும் செய்யலாம்.
2. தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய மின்னஞ்சல்களை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்
3. உங்களுடைய பிற கணக்குகளுக்கான (வங்கி, ஷாப்பிங், போன்றவை.) கடவுச்சொற்களை மீட்டமைக்க உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.
இவற்றை தடுக்க 2 படிநிலை சர்பார்ப்பு மிகவும் அவசியமாகிறது.
எப்படி இந்த முறையானது செயல்படுகிறது..?
1 கூகுள்-ல் உள்நுழையும் போது, வழக்கம்போல் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுவீர்கள்.
2. பிறகு, உங்கள் தொலைபேசிக்கு உரை, குரல் அழைப்பு அல்லது செல்பேசி பயன்பாடு வழியாக அனுப்பப்பட்ட குறியீடு கேட்கப்படும். அதனை உள்ளிட வேண்டும்.
இப்பொழுது தான் ஜிமெயில் அல்லது கூகுளின் மற்ற பயன்பாடுகள் திறக்கும்.
சரி. இப்ப உங்களுக்கு இன்னொரு கேள்வி கேட்க தோன்றும்...
நான் என் கணினியில் பயன்படுத்தும் போது ஏன் நான் 2 படிநிலை சரிபார்ப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நான் பயன்படுத்தாத கருவிகளில் நுழையும்போது மட்டும் சரிபார்ப்பு இருந்தால் போதுமே என்று எண்ணுவீர்கள்...
உள்நுழையும்போது, குறிப்பிட்ட கணினியில் 2ம் படிநிலை குறியீடு கேட்கப்படாமல் இருக்க வழி உள்ளது. அப்படி செய்யும் போது, நீங்கள் உள்நுழையும்போது கணினியானது உங்கள் கடவுச்சொல்லை மட்டுமே கேட்கும்.
இதே வழிமுறைதான் செல்பேசியில் மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கும்.
சரி இதை எப்படி செயல்படுத்துவது..?
இதை சொடுக்கவும்: https://accounts.google.com/SmsAuthConfig அல்லது https://www.google.com/settings/security என்ற இணைப்பிற்கு சென்று 2 படிநிலை சரிபார்ப்பு வசதியை நிறுவிக்கொள்ளலாம்..
அதற்கான வழிமுறைகள் படங்களாக கீழே உள்ளன..

மேற்கண்ட 1, 2 வது நிலைகளை அடுத்து, 3 மற்றும் 4வது நிலைகளில் இந்த பாதுகாப்பு முறை பற்றிய விளக்கம் இருக்கும்.
அனைத்து முடிந்தாயிற்றா..?
இப்போது நீங்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் கூகுள் கணக்கை கொண்டு வந்துவிட்டீர்கள்..
சரி . இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றாலும், நிறுத்திக்கொள்ளலாம். அதற்கும் அங்கேயே இணைப்பு இருக்கும்..
2 படிநிலை சரிபார்ப்பின் சிறப்பம்சங்கள்
உரைச் செய்தி வழியாக குறியீடுகளை பெறுதல்
மாற்று தொலைபேசி எண்கள்
பிரதி குறியீடுகள்
இணைப்பும் இல்லை, சிக்கலும் இல்லை
உங்கள் கணினிகளைப் பதிவுசெய்யவும்
நினைவிற்கொள்க... இந்த இரண்டு படிநிலை சரிபார்ப்பு மூலம் உள்நுழைதலுக்கு.. செல்பேசி அவசியம். அதில் தான் ரகசிய குறியீடு ஒவ்வொரு முறையும் வரும்.
சந்தேகங்களுக்கு YourRaajV@Gmail.com அல்லது fb.com/YourRaajv என்ற முகநூல் முகவரிக்கு செய்தி இடவும்.
இன்னும் தொழில்நுட்பம் பேசுவோம்....

உங்கள் செல்பேசிக்கு சரிபார்ப்பு குறியீடுகளை கூகுள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பும்.
மாற்று தொலைபேசி எண்கள்
மாற்று தொலைபேசி எண்களைச் சேர்க்கவும், ஏனெனில் முதன்மை தொலைபேசி கிடைக்காத நேரத்தில் Google சரிபார்ப்பு குறியீடுகளை உங்களுக்கும் அனுப்புவதற்கான மற்றொரு வழியாகும்.தொலைபேசி அழைப்பை விரும்புகிறீர்களா?
உங்கள் சரிபார்ப்பு குறியீடு மூலம் உங்களுடைய தொலைபேசிக்கு Google அழைக்கும்
பிரதி குறியீடுகள்
உங்கள் தொலைபேசிகள் கிடைக்காத நேரங்களில், அதாவது பயணம் செய்யும்போது ஒரு முறை பயன்படுத்தும் பிரதி குறியீடுகளை பதிவிறக்கிக்கொள்ளலாம்.
இணைப்பும் இல்லை, சிக்கலும் இல்லை
Android, iPhone அல்லது BlackBerry ஆகியவற்றிற்கான Google Authenticator பயன்பாடானது சரிபார்ப்புக் குறியீடுகளை உருவாக்கி தரும். உங்கள் சாதனத்தில் தொலைபேசி அல்லது தரவு இணைப்பு இல்லாத நேரங்களிலும் இது வேலைசெய்யும்.
உங்கள் கணினிகளைப் பதிவுசெய்யவும்
உள்நுழையும்போது, உங்கள் கணினியில் மீண்டும் குறியீடு கேட்கப்படாமல் இருக்க அமைப்புகளில் தேர்வு செய்துக்கொள்ளலாம்.