நான் பிழைப்பை கடத்தும் துறையில் நுழைந்தபோது பொறியாளன் என்பதை காட்டிக்கொள்ள தயங்கியதுண்டு.
மிகைதகுதியால் மிகைப்படுத்தல் ஆகி, இருப்பவர்களோடு இடைவெளி கண்டதை களைய பழகுதலை படித்தே படிகளை பற்றினேன்.
அண்மையிலொருநாள்...
கடந்துவிட்ட காலத்தை அசைபோட பொழுதொன்று இடம்கொடுக்க, இணை பிழைப்பாளிகளோ என் இனமடா நீ என்று கோர்வையாக தோளுயர்த்தி சொன்னது தான் எனக்கு சிலிர்ப்பு.
பட்டம் முடித்து பணியின்றி இருக்கும் பொறிஞனுக்கு சமூகம் சுட்டும் சொல் - வளாக நேர்காணல் வாய்க்கவில்லையா ?
பொறியாளன் மட்டும் தான் துறைபாரா நுழைதிறன் உடையான் என்பதை பத்தாண்டு காலத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கும் வியப்பு.
ஈட்டும் தொகையில் உள்ள எண்களின் இலக்கங்கள், படித்து பெற்ற மதிப்பு எண்களின் இலக்கங்களுக்கு தொடர்பு உண்டா என்ன?
அந்த மாய எண்களுக்கு தானே துறை எதுவென பாராமல் புரையோடி கிடக்கிறான் பொறியாளன்.
நீருக்கு மன்றாடும் இருநாட்டு மன்னர்களின் மாய எண்களைப் போல் , தான் ஈட்டும் எண்களுக்கும் ஒருநாள் மதிப்பு கூடாதா என்று ஒவ்வொரு இரவையும் கடப்பதைப்போல், இன்றிரவையும் உள்ளபடியே கடப்பான் பொறிபடித்த என் இனத்தான்...