15.3.10

உலகின் முதல் இணையப்பெயரின் வெள்ளி விழா !!!

200,000,000 க்கும் மேற்பட்ட இணைப்பெயர்கள் இன்று உள்ள நிலையில் உலகின் முதல்ம் இணையப்பெயர் எதுவாக இருக்கும் , யார் அதை பதிவு செய்திருப்பார்கள் என்ற கேள்வி நம்முள் எழும்.. அல்லது எழுந்திருக்கும்.
 

1985 மார்ச்சு 15ம் நாள் - உலகின் முதலாவது இணையப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.

DNS எனப்படும்  இணையப்பெயர் வழங்கல் சேவை  1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பின்னர் 1985ல் .com , .org, .edu, .gov, .mil, ,ccTLD உள்ளிட்ட முதல் மட்ட இணைப்பெயர் நீட்சிகள் நிர்ணயிக்கப்பட்டது.

முதல் .com , symbolics.com, பதிவு செய்த நாள் மார்சு 15,1985 ஆகும்

முதல் .edu , cmu.edu,purdue.edu,rice.edu,ecla.edu, பதிவு செய்த நாள் ஏப்ரல்,1985 ஆகும்
முதல் .gov , css.gov, பதிவு செய்த நாள் சூன்,1985 ஆகும்
முதல் .org , mitre.org, பதிவு செய்த நாள் சூலை 15,1985 ஆகும்


முதல் 100 பெயர்கள்...

SYMBOLICS.COM
BBN.COM
THINK.COM
MCC.COM
DEC.COM
NORTHROP.COM
XEROX.COM
SRI.COM
HP.COM
BELLCORE.COM
IBM.COM
SUN.COM
INTEL.COM
TI.COM
ATT.COM
GMR.COM
TEK.COM
FMC.COM
UB.COM
BELL-ATL.COM
GE.COM
GREBYN.COM
ISC.COM
NSC.COM
STARGATE.COM
BOEING.COM
ITCORP.COM
SIEMENS.COM
PYRAMID.COM
ALPHACDC.COM
BDM.COM
FLUKE.COM
INMET.COM
KESMAI.COM
MENTOR.COM
NEC.COM
RAY.COM
ROSEMOUNT.COM
VORTEX.COM
ALCOA.COM
GTE.COM
ADOBE.COM
AMD.COM
DAS.COM
DATA-IO.COM
OCTOPUS.COM
PORTAL.COM
TELTONE.COM
3COM.COM
AMDAHL.COM
CCUR.COM
CI.COM
CONVERGENT.COM
DG.COM
PEREGRINE.COM
QUAD.COM
SQ.COM
TANDY.COM
TTI.COM
UNISYS.COM
CGI.COM
CTS.COM
SPDCC.COM
APPLE.COM
NMA.COM
PRIME.COM
PHILIPS.COM
DATACUBE.COM
KAI.COM
TIC.COM
VINE.COM
NCR.COM
CISCO.COM
RDL.COM
SLB.COM
PARCPLACE.COM
UTC.COM
IDE.COM
TRW.COM
UNIPRESS.COM
DUPONT.COM
LOCKHEED.COM
ROSETTA.COM
TOAD.COM
QUICK.COM
ALLIED.COM
DSC.COM
SCO.COM
GENE.COM
KCCS.COM
SPECTRA.COM
WLK.COM
MENTAT.COM
WYSE.COM
CFG.COM
MARBLE.COM
CAYMAN.COM
ENTITY.COM
KSR.COM
NYNEXST.COM

 
March 15 1985
April 24 1985
May 24 1985
July 11 1985
September 30 1985
November 7 1985
January 9 1986
January 17 1986
March 3 1986
March 5 1986
March 19 1986
March 19 1986
March 25 1986
March 25 1986
April 25 1986
May 8 1986
May 8 1986
July 10 1986
July 10 1986
August 5 1986
August 5 1986
August 5 1986
August 5 1986
August 5 1986
August 5 1986
September 2 1986
September 18 1986
September 29 1986
October 18 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
October 27 1986
November 5 1986
November 5 1986
November 17 1986
November 17 1986
November 17 1986
November 17 1986
November 17 1986
November 17 1986
November 17 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
December 11 1986
January 19 1987
January 19 1987
January 19 1987
February 19 1987
March 4 1987
March 4 1987
April 4 1987
April 23 1987
April 23 1987
April 23 1987
April 23 1987
April 30 1987
May 14 1987
May 14 1987
May 20 1987
May 27 1987
May 27 1987
June 26 1987
July 9 1987
July 13 1987
July 27 1987
July 27 1987
July 28 1987
August 18 1987
August 31 1987
September 3 1987
September 3 1987
September 3 1987
September 22 1987
September 22 1987
September 22 1987
September 22 1987
September 30 1987
October 14 1987
November 2 1987
November 9 1987
November 16 1987
November 16 1987
November 24 1987
November 30 1987

29.1.10

தமிழ் இணையப் பயிலரங்கம்

தமிழ் இணையப் பயிலரங்கம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
சனவரி,30,2010

சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.
அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.
தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை உருவாக்கிய இந்த நிறுவனத்தின் தமிழியல் துறை சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்குரிய வாய்ப்புகளைத் தமிழியல் துறைத்தலைவரும், புகழ்பெற்ற பேராசிரியருமாகிய முனைவர் பழ.முத்து வீரப்பன் அவர்கள் உருவாக்கினார்.
அவர்களின் திட்டமிடலுக்கு ஏற்ப  எதிர்வரும்  சனவரி30, காரி (சனிக்) கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிலரங்கம் நடைபெறுகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் டாக்டர் ம.இராமநாதன் அவர்கள் பயிலரங்கத்தினைத் தொடங்கி வைத்து வாழ்த்துரைக்க உள்ளார். பேராசிரியர் பா.பழனியப்பன்(முதன்மையர்,பொறியியல்புலம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்),பேராசிரியர் வ.செயதேவன்,(சிறப்புநிலைப் பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை,சென்னைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் வாழ்த்துரைக்க உள்ளனர்.
முனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி),தமிழ்நிலவன்(கணிப்பொறி வல்லுநர், பெங்களூர்)விசயகுமார்(ஆசிரியர்,சங்கமம் லைவ்,நாமக்கல்),செல்வமுரளி(ஆசிரியர்,தமிழ் வணிகம், சேலம் )கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு ஆகியோர் மாணவர்கள், ஆய்வாளர்களுக்குத் தமிழ் இணையப் பயிற்சி அளிக்க உள்ளனர். பல்கலைக் கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில்  இதுவே முதல் முயற்சியாகும்.

5.1.10

"புதிய தலைமுறை “ இதழில் தமிழுக்கான கூகுள் IME பற்றிய கட்டுரை

இந்த வார (1/1/10) "புதிய தலைமுறை “ இதழில் தமிழுக்கான  கூகுள்  IME பற்றிய எமது கட்டுரை வெளிவந்துள்ளது.
அதனை வாங்கிப் படிக்கவும்.

 http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html


ஆசிரியர் மாலன் அவர்களுக்கும் மற்றும் இதழ் குழுவினருக்கும் எமது  நன்றி

25.12.09

எங்கேயோ கேட்ட குரல் !

மீனா - பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா - பிரசன்ட் மிஸ்
புனிதா - பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா ?
நோ! டமில்...? நோ மிஸ் - ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்
காதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி - என்றார் மாக்சுமுல்லர்
தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,
தமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.
தமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது - என்றார் கால்டுவெல்
எண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.

இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

தமிழால் முடியும் - ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்? சற்றே சிந்திப்பீர்
!

நன்றி:
தமிழ் இலெமூரியா இதழ்


தமிழ் பெயர்கள்:
http://web.archive.org/web/20071213202034/www.nithiththurai.com/name/index.html
http://www.tamilcc.org/thamizham/ebooks/3/277/277.pdf 
http://www.thamizham.net/pdffiles/multiname01.pdf
http://www.tamilcc.org/thamizham/ebooks/4/391/391.pdf
http://sempulam.com/files/pdf/pure-tamil-name.pdf
தமிழ்ச்சொற்கள்:
http://www.tamilcc.org/thamizham/ebooks/5/450/450.pdf




22.12.09

கற்போம்கணினி: நமது கணினியில் மற்றொருவர் கணினியை திறப்பது எப்படி?

அலுவலகமோ, உள்வலையமைப்புக்கொண்ட பணிச்சூழலிலோ உள்வலையமைப்பில் இருக்கும் கணினிகளை இருந்த இடத்தில் இருந்தே அணுக முடியும். அவ்வாறு, உள் வலையமைப்பில்(Local Area Network)இணைக்கப்பட்டிருக்கும்  கணினிகளில் , ஒரு கணினியை இன்னொரு கணினித்திரையில் பார்ப்பதற்கு விண்டோசு எக்சுபி வசதிகளை வழங்குகிறது.
இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் கணினிகளில் உள்ள பயன்பாடுகளின் சிக்கல்களை, ஐயங்களை  ஒருவர் தனது கணினியிலிருந்து அந்த கணினியை அணுகி அச்சிக்கல்களை சரி செய்ய முடியும்.
அவ்வாறு செய்வதற்கான வழி முறைகளை இங்கே பார்ப்போம்.


முதலில் உங்கள் கணினி அலுவலக உள்வலையமைப்பில்(LAN) இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

மேலும், தொடர்புக்கொள்ள இருக்கும் 2 கணினிகளின் அமைப்புகளில் கீழ்காணுபவை சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

1.கணினிகள் ஒன்றோடொன்று தொலைவில் இருந்து தொடர்புக்கொள்வதில் இணக்கம் கொள்ளுதல்.



 My Computerல் வலது சொடுக்கம் செய்து, பின்னர் அதில் Properties ஐ சொடுக்க வேண்டும். இப்போது திரையில் தோன்றும் சாளரத்தில் Remote எனும் கீற்றை தேர்ந்தெடுத்து, Remote Desktop என்பதின் கீழ் உள்ள, Allow users to connect remotely to this computer எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

2.கணினிகளின் இணைய எண்ணை(IP Address) குறிப்பெடுத்துக்கொள்ளுதல்

இணைய எண்ணை (IP) கண்டறியும் முறை:
1. Start-> Run ஐ சொடுக்கிக்கொள்ளவும்.

2. இப்போது வரும் சாளரத்தில் cmd என்று தட்டச்சு செய்து, Ok அழுத்தவும்.
3. இப்போது வரும் திரையில் ipconfig தட்ட்ச்சு செய்து, Enter அழுத்தவும். இப்போது IP எண் தோன்றும். அதை குறித்துக்கொள்ளவும்.

கணினியை இணைக்கும் முறை:




இப்போது, Start->All Programs->Accessories->RemoteDesktopConnection
சொடுக்கவும்.

ஒரு சாளரம் தோன்றும். அதில் , தொடர்புக்கொள்ள வேண்டிய கணினியின் இணைய எண் (IP) குறிப்பிடவும்.



பின்னர் connect என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். இப்போது
அந்த கணினியின் தொடக்க திரை தோன்றும். அதில் புகுச்சொல்,கடவுச்சொல் கொடுத்து உள் நுழைய வேண்டும்.

இவ்வாறு உள் நுழையும்போது, தொடர்புக்கொள்ள இருக்கும் கணினியின்  நடப்பு திரை பூட்டப்படும்.
அதாவது அதில் நாம் தொடர்ந்து ஒரு நேரத்தில் 2 இடத்திலும் பணி செய்ய இயலாது.

அதேப்போல், அணுகக் கூடிய கணினிக்கு நுழைவு புகுச்சொல்,கடவுச்சொல் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இயக்கம் செயல்ப்படுத்த முடியும்.


இவ்வாறு செய்து, கணினிகளை தொலைவில் இருந்துக்கொண்டு இயக்கலாம்.

இத்தொழில்நுட்பம்,  அலுவலகங்களில் தொழில்நுட்ப உதவிகளுக்கு பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் ஒரு கணினியிலிருந்து 2 கணினிகளை பயன்படுத்தி பணி செய்வதற்கான சூழலில் பயபடுத்தலாம்.

முயற்சி செய்துப்பாருங்கள்.

குறிப்பு: மேலுள்ள படங்கள் பெரிதாக பார்க்க அதன் மீது சொடுக்கி பார்க்கவும்.



காலாவதி நிலையில் செம்மொழி நிறுவன வலைத்தளம்

செம்மொழி மய்ய இணையத்தளம் காலாவதியாகி ஒருமாதமாகிறது
Ciil-classicaltamil.org domain name expired on Dec 01 2009 09:50PM.
தமிழ் மாநாடெல்லாம் நடக்க இருக்கிற இந்த நேரத்தில் தமிழ் செம்மொழி நிறுவன வலைத்தளம் இப்படி இயங்காமல் இருப்பது. துறை சார்ந்தவர்கள் கவனிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.


http://www.ciil.org/ Central Institute of Indian Languages ல் Past Projectsல் www.Ciil-classicaltamil.org இணையத்தளம் உள்ளது. அதில் உள்ள இணையத்தளங்களில் www.Ciil-classicaltamil.org மட்டும் புதிப்பிக்கப்படாமல் உள்ளதை அறிய முடிகிறது.
http://www.cict.in/
புதிய முகவரி அறியப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதில் இருக்கும் இணைப்புகளும் பயன்பாடுகளும் சிறந்தவைகளாக இருக்கின்றன.


நம் ஏக்கமெல்லாம் தமிழ் வளர்ச்சியின் பேரால் குளறுபடிகள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுவே.


தமிழ் வளர்ச்சியே! தமிழின வளர்ச்சி!!!

இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இருக்கும் நாம் , அவ்வளர்ச்சியின்பால் மொழி, இனக்காப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்தும் அறிந்த சமூகமாக தமிழினம் அமைய வேண்டும்.
வடக்கே(வட இந்தியா) இருப்பவர்களுக்கு அவர்தம் மொழிப்பற்றுதான் ஓங்கியிருக்கும். நம் மொழி குறித்த வளர்ச்சியில் நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்.

இணையதளம் புதுப்பிக்க முயற்சி செய்யுங்கள்



தொடர்புடைய பழைய பதிவுகள்:
http://thamizhthottam.blogspot.com/2009/01/blog-post.html
http://thamizhthottam.blogspot.com/2009/01/blog-post_02.html



21.12.09

தமிழ் கணினி: கூகிள் வழங்கும் எளிமையான தமிழ் தட்டச்சுவான்

கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தமிழை நமது கணினியில் தட்டச்சு செய்வதற்கு எளிமையான கருவியை கூகிள் வழங்கி இருக்கிறது.அதன் பெயர் Google Transliteration IME
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் கூகிள் தனது தரவுத்தளத்திலிருந்து ஏராளமான சொற்களை வழங்குகிறது. இதனால் தமிழை ஆங்கில முறையில் தட்டச்சு செய்யும் போதே உதவி சொற்கள் வந்துவிடுகின்றன. இதனால் நாம் முழுமையாக தட்டச்சு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.

இந்த மென்பொருள் உள்ள இணைப்பு....

http://www.google.com/ime/transliteration/

இதில் தமிழ் என்பதை தேர்ந்தெடுத்து, பதிவிறக்கிகொண்டு, கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்னர்,
Windows XP இயங்குதள பயனாளர்கள் தங்கள் கணினியில் பயன்படுத்தும் முறை

1. கணினியில் Control Panel ல் Regional and Language Options ல் Languages கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.



Supplement Language Support ன் கீழ் Install Files for complex Script என்பது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தேர்வு செய்து, விண்டோசுக்கான நிறுவல் குறுவட்டை செலுத்தி நிறுவ வேண்டும்.

அதில் Text services and input languages (Details) என்பதை சொடுக்கி, Advanced கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


 
2.அதில் System Configuration ன் கீழ் Turn off advanced text services எனும் தேர்வு பெட்டி தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்துக் கொள்ளுங்கள்

3. மேலே Settings எனும் கீற்றை( tab ) தேர்ந்தெடுக்கவும்.


4. இப்போது, Preferences என்பதன் கீழுயுள்ள Language Bar ஆழியை சொடுக்கவும்.
5. இதில் Show the Language bar on the desktop எனும் தேர்வுப்பெட்டியை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் OK யை சொடுக்கவும்.
6. அதேப்போல் , Installed Services ன் கீழ் உள்ளிட்டு மொழி தேர்வில் தமிழை இணைக்க வேண்டும். அதற்காக, அதன் அருகில் உள்ள Add எனும் ஆழியை சொடுக்க வேண்டும். இப்போது வரும் சாளரத்தில் Input Languages: என்பதில் தமிழை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் Keyboard layout/IME: ல் Google Tamil Inputஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

7. இப்போது OK ஆழியை சொடுக்கி அனைத்தையும் முடித்துக்கொளவும்.

இப்போது பணிப்பட்டையில் EN அல்லது TA என்று சிறு சின்னம் இடம்பெற்றிருக்கும்.அதில் தேர்ந்தெடுத்துக்கொண்டு தட்டச்சு செய்யலாம்.



எடுத்துக்காட்டாக. TA என்பதை தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் திரையில் நிலைக்கருவி தோன்றும் (படம்1)


நாம் தட்டச்சு செய்தால் அங்கு குறிப்புடன் கூடிய  பெட்டி தோன்றுவதை காணலாம்.(படம்2)

விசைப்பலகை உதவிக்கு வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தியும் தட்டச்சு செய்யலாம்.(படம்3)



என்ன அற்புதமான கூகிளின் படைப்பு பாருங்கள். நாம் கணினியில் தமிழை பயன்படுத்துவதில் இனி தடை ஏதுமில்லை. அதற்கான தீர்வுகள் உடனுக்குடன்  வந்துக்கொண்டிருக்கின்றன. அதனால், தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்.


வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...