நல் வழிகாட்டி - எதிர்கால கனவு என்பதை கூட கனவு காண முடியாத ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், சமூகத்தில் வெளியுலகமே அறியாதவர்களை பன்னாட்டு பார்வைக்கு கொண்டு செல்லவும், ஏழைக்குழந்தைகளின் வாழ்க்கை வழிகாட்டியாய், இளைஞர்களை உள்ளடக்கி உஇயங்கி வரும் அறக்கட்டளை.....
11.9.11
23.8.11
அட முட்டாள் பய தமிழக அரசே....!
அட முட்டாள் பய தமிழக அரசே....!
தொல்லியியல், வானியல் நிபுணர்களை வைத்து, ஆராய்ந்து தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ன்னு இப்போ மாத்திட்டாங்களாம்.....!
அடேய்.... இத படிங்கய்யா முதல்ல... வரலாறு தெரிஞ்சிக்குங்க,...
http://thamizhthottam.blogspot .com/2008/12/blog-post_24.html
தமிழனை தமிழனா வாழ் விடமாட்டங்க போலிருக்கே... தமிழனுக்கு என்று ஒரு அடையாளமும். இல்லைங்கிற நிலை வரப்போகுது....
தமிழர்களே விழிப்பா இருங்க...!!
19.8.11
29.6.11
தமிழில் மொழிபெயர்ப்பு கருவி..
நண்பர்களே.. தமிழ் மொழி மட்டுமே தெரிந்துக்கொண்டு உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தற்போது நாம் கடிதங்கள் எழுதலாம்.... அதேப்போன்று, பிற மொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மாற்றி படிக்கலாம்.
ஆம். நிச்சயமாக மேற்சொன்னவாறு செய்ய முடியும் நம்மால்.
கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி ஒன்றிணைக்க முயற்சி செய்திருக்கிறது.
தங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழி கருவிகளை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.
குறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால்..
செய்திகள், மின்ன்ஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது
தற்போது தமிழுலகிற்கு கூகுள் வழங்கியுள்ள சேவையானது கூகுள் மொழிமாற்றி ஆகும். Google Translate.
இந்த கருவி முதற்கட்டமாக சோதனை அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இப்போது, கீழ்காணும் பக்கம் தோன்றும்.
இப்போது, (மூலம்) From என்பதில் மொழி மாற்றம் செய்ய வேண்டிய வாக்கியத்தின் மொழியையும், (பெறுநர்) TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியையும் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் மொழிப்பெயர் (Translate) என்ற பொத்தானை சொடுக்கினால் அருகில் மொழி பெயர்க்கப்பட்ட வாக்கியம் தோன்றும்.
இந்த வாக்கியங்களில் பிழைகள் தோன்றலாம். அதனை சரி செய்ய கூகுள் நமக்கு வசதிகளை செய்து தருகிறது...
அதன் மூலம், நாமே பிழை திருத்திவிடலாம்.
இதனால் அடுத்த முறை பிழை ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஆனால், ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் ஓரளவு சரியாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இந்த வசதியை முழுமையாக பெற நமக்கு வெகு நாட்கள் எடுக்கலாம். ஆனால் நாமெல்லோரும் ஒத்துழைத்தால் விரைவில் முழுமையான மொழி பெயர்ப்பு கருவி உருவாகிவிடும்.
நாம் வெறும் வாக்கியங்களை வைத்து மொழி பெயர்க்காமல், ஒரு இணையதளத்தையோ அல்லது ஆவணத்தையோ மொழி பெயர்க்க முடியும்...
உதாரணமாக... உரைப்பெட்டியில் இணையதள முகவரியை இட்டால், அந்த தளம் எளிதாக மொழி மாற்றமாகிவிடும்..
கூடுதலாக மொழி மாற்றம் செய்யப்பட்ட வாக்கியங்கள் நமக்கு ஒலி வடிவிலும் கிடைக்கிறது.
பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் நிலையிலிருந்து சாதாரணமாக வெறும் தாய்மொழியை தெரிந்தாலே போதும் கணினி கற்று, கையாளவும் செய்யலாம் என்ற நிலை தற்போது வந்துள்ளது.
இதுப்போன்ற மொழி கருவிகள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பெருகினால், தகவல் தொடர்பு எளிதாகிவிடும் என்பது திண்ணம்.
குறிப்புகள்:
1. 1. பொதுவாக ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்பு கருவி என்பது எளிமையானதாக அமைந்துவிடும். காரணம், வாக்கிய அமைப்புகளும், பொருளும் வேறுபடுமே ஒழிய எழுத்துகள் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்..
2. கூகுள் இதுவரை 63 மொழிகளில் மொழி பெயர்க்க கூடிய அளவிற்கு சொல்வளம் கொண்டுள்ளது. அதில் தமிழ், இந்தி, உட்பட 6 இந்திய மொழிகளும் அடக்கம்.3. கணினி துறையில் Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் கீழ் வரும் Natural Language Processing ( இயற்கை மொழி செயலாக்கம்) என்பது மனிதர்கள் பேசும் மொழியிலேயே கணினியானது சமிக்ஞைகளை ஏற்று செயல்படக்கூடிய தன்மை பற்றியதாகும். இந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் கீழ் வருவது தான் Machine Translation. இது குறித்த ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ளன. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்கு Artificial Intelligence குறித்த போதிய அறிவுறுத்தலை தருவதில்லை. இந்த துறை சவாலானதும், தேவையானதுமாகும்.
பொறியியலில் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை மாணவர்கள் பெற இதுப்போன்ற திட்டங்களை, திட்டப்பணிகளை எடுத்து செயல்படுத்தவேண்டும்.
கணினி தமிழ் துறை இதற்கான உதவிகளை அதிகரிக்க வேண்டும்.
27.6.11
இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....
27-06-1974
இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்த்த நாள் இன்று.....
6.6.11
பாப்பாவான பாபாவின் Publicity Patriotism
நள்ளிரவில் கைதுக்கு பயந்து பாபா(?) ராம்தேவ் திடீரென மேடையிலிருந்து குதித்து சுடிதார் துப்பட்டா அணிந்து கொண்டு பாப்பாவாகி தப்பிக்க முயன்றுள்ளார்.
உண்மையான சத்தியாகிரகி பெண்கள் உடையில் ஒளிந்துக்கொண்டு ஓடமாட்டான் - ராம்தேவ்க்கு காங். பொதுச்செயலாளர் ஜனார்தனன் திவேதி தாக்கு
உடனே செருப்பால் அடிக்க போலி செய்தியாளன் முயற்சி.
இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் என்னவென்றால்.
ஊழலை எதிர்த்து போராடும் ராம்தேவ் மீதான நடவடிக்கையை கண்டித்து பாஜக தர்ணா.
தர்ணாவில் சுஷ்மா சுவ்ராஜ் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
இந்த ஒழுங்கீனமான நாட்டுப்பற்றை என்னவென்று சொல்வது.?
'Publicity Patriotism' செய்யும் ராம்தேவ், RSS & CO உள்ளிட்டோரின் செயற்பாடுகள் கூட ஒருவித அரசியல் ஆதாயம் தேடும் "நாட்டுப்பற்று ஊழல்"தான்.

31.5.11
அறிவு கெட்டவனுங்க...
அறிவு கெட்டவனங்க...
மாரியம்மன் கோயில்ல கூழ் ஊற்றும் திருவிழாங்கிற பேர்ல மடத்தனமான ஒரு வேலைய செஞ்சிட்டிருக்காங்க...
( பொதுவாக எல்லா காராமத்திலேயும் நடப்பதுதான் ) எங்க ஊர் திருவிழாவில் ஒரு பகுதியா சாமி ஆட வேண்டி சில பேரை வரிசையா நிற்க வச்சி பம்பை உடுக்கைன்னு அடிக்கிறாங்க...
ஒரு மணிநேரமா ஒன்றும் நடக்கலை...
பார்த்தான் ஒருத்தன் திடிர்ன்னு குதிச்சிக்கிட்டே வந்து 'தாம் தான் சாமிங்கிறான். ஊர்ல யாரோ செய்வினை வச்சதால தான் தன்னால (சாமி) எதுவும் செய்யமுடியலங்கிறான்...'
இப்படியே சாமி தன்னுடைய கையாலாகா தனத்துக்கு காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறதே தவிர நாட்டு பிரச்சனை சமூக பிரச்சனைகளை பேசவுமில்லை அதை பற்றி யாரும் கேட்கிறதும் இல்லை. ஒருவழியா திருவிழா திருப்தி தானான்னு கேட்டு மலை ஏற்றிட்டாங்க...'
பாருங்க எவ்வளவு அறிவிலி தனமான போக்கு இது.
'மக்களின் நம்பிக்கை' என்பதற்காகவே இதனை ஏற்று கொள்ளும் மனோபாவம் ஏன் மாறமாட்டேங்குதுன்னு தான் தெரியல...
சிறுதெய்வ வழிபாட்டு முறையில் நடக்கும் இந்த செயற்பாடுகள் 'பண்பாட்டு' அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கோடையை போக்கி மழை பொழிந்து விளை நிலங்கள் குளிர செய்து உழவு தொழிலை வளங்கான வேண்டி மாரி(மழை)அம்மனை வழிபடுகிறார்கள்.
கோடை முடிந்தால் காரி காலம் வரும். அப்போது தானாக மழை பெய்யும் என்கிற தகவல் அறியும் வாய்ப்பையும் நுட்பங்களையும் நாம் பெற்று இருக்கிற சூழல் தற்போது உள்ளது.
இந்நிலையில் அம்மனையும் அய்யனையும் நம்பி இருப்பதனால் ஆக்கம் எதுவும் நிகழ போவதில்லை.
சாமி ஆடுதல் என்பதை கூட நாம் ஆய்வு செய்தால் 'அந்நியன்','சந்திரமுகி' திரைப்படங்களில் வரும் கதை போல தான். உளவியல் சிக்கலாகதான் அதை எடுத்துகொள்ள வேண்டும்.
தம்மீது சாமி வரவேண்டும் என்கிற ஆவலோடு இருக்கும் ஒருவரின் மனதில் ஆழமாக இறைநம்பிக்கையும் ஊன்றி இருக்கும். ஏற்கனவே உள்ளூர் பிரச்சனைகளும், சாமி செய்தால் நல்லா இருக்கும் என்று தாம் எதிர்பார்த்து வைத்திருந்த விசயங்களும் பொங்கி எழுந்து தன்னிலைபிறழ்ந்த நிலைக்கு ஆளாக்கப்படுகிறார் சாமியாடி.
பின்னர் சாமியாக மாறுகிறார்.
அப்போது அவரது மூளையையும், நரம்புகளையும் ஒரே அலைவுகளில் வைத்துக்கொள்ளவும்,பிறழ்வு நிலையை உச்சக்கட்டத்தில் வைத்துக்கொள்ளவும் பம்பை உடுக்கை ஒலியை ஏற்றி இசைக்கிறார்கள்.
பிறகு, இயல்பு நிலைக்கு கொண்டுவர வெப்பத்தை கொடுக்கிறார்கள். (வாயில் எரியும் கற்பூரத்தை போடுவார்கள்)

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...