அன்பிற்கினிய நண்பர்கள் பார்வைக்கு வணக்கம்.
அளவிட முடியாத பழமைவாய்ந்த நம் மொழி,காலத்தால்,பல மாறுதல்களை கண்டு, சிதைந்த நிலையில் தமிழ் இனத்தால் பின்பற்றப்படுகிறது.இச்சிதைவு நிலை களையவே மின்னிலும் மண்ணிலும் இயக்கங்களும் போராட்டங்களும்.!
மின்னில் நாம் வலுவாகவே பதிந்து வருகிறோம். இனி பயமில்லை,எப்படியாவது தமிழ் வளர்ச்சி கண்டுவிடலாம். ஆனால், மண்ணில்தான் பெருஞ்சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
தமிழ்மண் காக்கப்படவேண்டும்.சுரண்டல்களுக்கும்,சீரழிவுக்கும் ஆளாக்கப்படக்கூடாது.இதன் பொருட்டு மின்னால் மண்ணின் தமிழ் வளர்ச்சி காண திட்டமொன்று தீட்டியிருக்கிறேன் . நண்பர்கள் பரிசீலித்து,செயற்படுத்த பரிந்துரைக்கவும்.
சிற்றூர் தோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு இருவழியில் கல்வியளிக்கலாம்.
அ. தமிழ் வழி கணினிக்கல்வி
ஆ.கணினி வழி தமிழ்க் கல்வி
<> தமிழ் வழி கணினிக்கல்வியானது,இன்று நம் சிற்றூர்புற மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும் . தன் தாய்மொழியிலேயே உலகம் போற்றும் ஒரு கருவியின் பயன்பாட்டை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.
ஆங்கில மாயையை உடைத்தெறிந்து,தமிழால் வழங்கும் போது ஆர்வம் மிகும்.
<> தமிழை மதிப்பெண் பாடமாக மட்டும் போற்றும் பள்ளிகளால்மாணவர்கள் தமிழ் மொழியை முழுமையாக கல்லாநிலை உருவாக்குகிறது.தெளிந்த விளக்கத்துடன் பல்லூடகவழி கணினியில் வழங்கும் போது ,தானே கற்றல் மூலம் சிக்கலின்றி தமிழ்மொழி அறிவர்.
இதனோடு, தமிழ்மரபு,கலை இலக்கியம் பண்பாடு போன்றவற்றை நாம் கற்பிக்கமுடியும்.
இயல் இசை நாடகம் அறிவியல் ஆகிய நான்கு தமிழும் கணினி வழி அறிதலை நாம் ஏற்படுத்த வேண்டும்.
செயல்வடிவம்.
அ. சிற்றூர் தோறும் ஓர் ஆர்வலரை கண்டறிந்து , அவர்மூலம் நம் செயல் திட்டங்களை செயற்படுத்துதல்.
ஆ. அந்தந்த பகுதியிலுள்ள கல்லூரிகள்/பள்ளிகளின் உதவியோடு கணினி கல்வி தர முடியும் அவர்கள் உதவியால் கணினி பெற்று அக்கல்விநிலைய (நாட்டுநல பணித்திட்ட) மாணவர்கள் துணைக்கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம்.
இ. நம் நாட்டில் ஒவ்வொரு சிற்றூர்(ஊராட்சி) மன்றத்திலும் கணினி வழங்கப்பட்டுள்ளது.அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று,அக்கருவிகள் மூலம் எளிமையாக இணைய வழி பயிற்சியளிக்க முடியும்.
(அனைத்து வசதிகள் கொண்ட ஊராட்சி கணினிகள் பயன்படுத்தாது பாழடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
இது நான் தயாரிக்கும் "மக்கள் கணினி" திட்டப்பணியின் சுருக்க விளக்கம்.
இதனை செயற்படுத்த இணைவோம் இயற்றுவோம்!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வணிகமொழியானது தமிழ்!
தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...
-
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...
-
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றி...
-
புதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக